இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு புள்ளிவிவரங்கள் 2020-21
March 16 , 2022 1249 days 611 0
மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2020-21 ஆம் ஆண்டிற்கான இந்தியப் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு புள்ளி விவரங்களை வெளியிட்டார்.
இது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சகத்தின் வருடாந்திர வெளியீடு ஆகும்.
இது இந்தியாவின் பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத் துறையின் ஒரு ஒட்டு மொத்தக் கண்ணோட்டத்தினை வழங்குகிறது.
இந்தியா தனது கச்சா எண்ணெய்த் தேவையில் கிட்டத்தட்ட 85 சதவீதத்தை இறக்குமதி மூலம் பெறுகிறது.
எனவே, 2020-21 ஆம் ஆண்டில் இந்தியாவின் பெட்ரோலியப் பொருட்களுக்கான தன்னிறைவு விகிதமானது 15.6% ஆக இருந்தது.
தெற்காசிய நாடுகளிலேயே இந்தியாவில் தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாகும்.
இந்தியா தனது 54% அளவிற்கு இயற்கை எரிவாயுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு இறக்குமதியைச் சார்ந்துள்ளது.