- சமீபத்தில், புள்ளி விவரங்கள் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தேசியப் புள்ளி விவரங்கள் நிறுவனமானது (National Statistical Office - NSO) இந்தியப் பெண்கள் மற்றும் ஆண்கள் அறிக்கையினை வெளியிட்டுள்ளது.
- நாட்டில் பாலினங்களுக்கிடையே நிலவும் நிலைமையைச் சித்தரித்துக் காட்டும் முக்கிய சமூக – பொருளாதாரக் குறிகாட்டிகளை இந்த அறிக்கை ஒருங்கிணைத்து வழங்குகிறது.
மக்கள்தொகைப் புள்ளி விவரங்கள்
- 2021 ஆம் ஆண்டில் உத்தேசிக்கப்பட்ட மக்கள் தொகை 136.13 கோடிகளாகும்.
- 2001 ஆம் ஆண்டில் 933 ஆக இருந்த பாலின விகிதம் 2011 ஆம் ஆண்டில் 943 ஆக உயர்ந்துள்ளது.
- பாலின விகிதத்தில் டெல்லியானது மிக அதிக உயர்வைக் கண்டுள்ளது, அதனை அடுத்து சண்டிகர், அருணாச்சலப் பிரதேசம் ஆகியவை உள்ளன.
- அதே சமயம் டாமன் மற்றும் டையூ பாலின விகிதத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
சுகாதார புள்ளிவிவரம்
- 25 முதல் 29 வயது வரையிலான பெண்களில் வயது சார்ந்த கருவுறுதல் விகிதம் 146.4 ஆக உள்ளது.
- 2014 ஆம் ஆண்டில் 39 ஆக இருந்த குழந்தை இறப்பு வீதம் 2018 ஆம் ஆண்டில் 32 ஆக குறைந்துள்ளது.
- 2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் கிராமப்புறப் பகுதிகளில் மொத்த கருவுறுதல் வீதம் 2.3 ஆக இருந்தது.
- அது 2018 ஆம் ஆண்டில் நகர்ப்புறப் பகுதிகளில் 1.7 ஆக இருந்தது.
- 2007-09 ஆண்டுகளில் 212 ஆக இருந்த தாய்சேய் இறப்புவீதம் 2016-18 ஆண்டுகளில் 113 ஆக குறைந்துள்ளது.
- 2017 ஆம் ஆண்டில் 13 ஆக இருந்த பருவத்தினர் கருவுறுதல் வீதம் 2018 ஆம் ஆண்டில் 12.2ஆக குறைந்துள்ளது.
- தேசிய குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு 5 என்ற ஆய்வின் படி (NHFS-5) கிட்டத்தட்ட 100% பிறப்பு வீதமானது கோவா, கேரளா, லட்சத்தீவு ஆகியவற்றில் கணக்கிடப்பட்டு உள்ளது.
- 2017 ஆம் ஆண்டில் 1000 பேருக்கு 0.07 ஆக இருந்த HIV தொற்று 2019 ஆம் ஆண்டில் 0.05 ஆக குறைந்துள்ளது.
கல்வி
- 2011 ஆம் ஆண்டில் 73 ஆக இருந்த இந்தியாவின் கல்வியறிவு வீதம் 2017 ஆம் ஆண்டில் 77.7 ஆக உயர்ந்துள்ளது.
- கல்வியறிவு வீதத்தில் இராஜஸ்தான், பீகார், உத்தரப் பிரசேதம் ஆகிய மாநிலங்களில் பாலின இடைவெளி அதிகமாக உள்ளது.
- 15 வயதான பெண்களில் 8.3 சதவீதத்தினர் மட்டுமே பட்டப் படிப்பு முடித்துள்ளனர்.
- அதே சமயம் அதே வயதிற்குட்பட்ட ஆண்களில் 12.8 சதவீதத்தினர் பட்டப்படிப்பு முடித்துள்ளனர்.
- 8% மாணவிகளே 10 ஆம் வகுப்பு வரை கல்வியைத் தொடர்ந்துள்ளனர்.
பொருளாதாரப் பங்கேற்பு
- வருடாந்திர தொழிலாளர் சக்தி ஆய்வு (PLFS - Periodic Labour Force Survey) 2018-19 என்பதின் படி, கிராமப்புற பகுதிகளில் பணியிலுள்ள நபர்களின் எண்ணிக்கை விகிதம் ஆண்களில் 52.1 மற்றும் பெண்களில் 19 ஆகும்.
- அது நகர்ப்புற பகுதிகளில் ஆண்களில் 52.7 மற்றும் பெண்களில் 14.5 ஆகும்.
- 15 வயதுடைய பெண்கள் ஒரு மணி நேரத்திற்குப் பெறப்படும் சராசரி ஊதியமானது அதிகபட்சமாக அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளில் பெறப் படுகிறது (ஒரு மணி நேரத்துக்கு ரூ.147).
- டாமன் மற்றும் டையூ, ஒடிசாவில் இவர்கள் குறைந்தபட்ச ஊதியத்தை பெறுகின்றனர்.
- 15 வயதுடைய ஆண்கள், ஒரு மணி நேரத்திற்குப் பெறப்படும் சராசரி ஊதியமானது அதிகபட்சமாக லட்சத்தீவு மக்களால் பெறப்படுகிறது (ஒரு மணிநேரத்திற்கு ரூ.121).
முடிவுகள் எடுப்பதில் பங்கேற்பு
- 2020 ஆம் ஆண்டில் மத்திய அமைச்சரவையில் பெண்களின் பங்கேற்பு 9.26% ஆகும்.
- 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், 437.8 மில்லியன் பெண் வாக்காளர்கள் இருந்தனர்.
- இது 2014 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடுகையில் (397 மில்லியன்) அதிகமாகும்.
- பஞ்சாயத்து ராஜ் (கிராம உள்ளாட்சி) அமைப்புகளில் இராஜஸ்தான், உத்தரகாண்ட் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் பெண்களின் பங்கேற்பு அதிகமாக காணப் படுகிறது.