இந்தியப் பெருங்கடலுக்கான முதலாவது சாலை – இருப்புப் பாதைப் போக்குவரத்து இணைப்பு
September 6 , 2021 1451 days 655 0
மியான்மர் முதல் மேற்கு சீனாவின் செங்க்டூ எனும் முக்கிய வணிக மையம் வரை புதிதாக அமைக்கப்பட்ட இருப்புப் பாதை வழியேயான முதல் சரக்குப் பெட்டகமானது அனுப்பி வைக்கப்பட்டது.
இது இந்தியப் பெருங்கடலிலிருந்து சீனாவிற்கு ஒரு புதிய சாலை-இருப்புப் பாதைப் போக்குவரத்து வழியினை வழங்கும்.
இந்தப் போக்குவரத்து வழித்தடமானது கடல்-சாலை-இருப்புப்பாதை (இரயில்) என்ற இணைப்பினை உள்ளடக்கியது.
இந்தப் பாதையானது சிங்கப்பூர், மியான்மர் மற்றும் சீனா ஆகிய நாடுகளின் தளவாடப் பகுதிகளை இணைக்கிறது.
மேலும் தென்மேற்கு சீனாவுடன் இந்தியப் பெருங்கடல் பகுதியை இணைக்கும் ஒரு மிகவும் வசதியான நிலப்பரப்பு மற்றும் கடல்பகுதி இணைப்பாகவும் இது தற்போது செயல்படுகிறது.