விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 9வது தலைவர்கள் மாநாட்டில் இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கின் (IONS) தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக் கொண்டது.
16 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்லாந்திடமிருந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட இந்தியா, இரண்டு ஆண்டு காலத்திற்கு IONS அமைப்பை வழி நடத்தும்.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் கடற்படைகளுக்கு இடையே கடல்சார் ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்காக 2008 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையால் IONS தொடங்கப் பட்டது.
பிலிப்பைன்ஸ் ஒரு பார்வையாளர் நாடாக அனுமதிக்கப்பட்டது என்பதோடு மேலும் ஓமன் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணத்திற்கான பணிக் குழுவில் (HADR) இணைந்தது.
IONS தற்போது 25 உறுப்பினர் கடற்படைகளையும் 9 பார்வையாளர் நாடுகளையும் கொண்டுள்ளது என்பதோடுதலைமைப் பதவி ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் சுழற்சி முறையில் மாற்றப் படுகிறது.