இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கம்
July 5 , 2021
1493 days
607
- 7வது இந்தியப் பெருங்கடல் கடற்படைக் கருத்தரங்கமானது பிரான்சு நாட்டின் கடற்படையினால் ஏற்பாடு செய்யப்பட்டது.
- இது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்வாகும்.
- இது 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தொடங்கப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு முன்னெடுப்பாகும்.
- பிராந்திய கடல்சார் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும் உறுப்பினர் நாடுகளுக்கிடையேயான நட்புறவினை மேம்படுத்துவதற்குமான ஒரு மன்றமாக இது திகழ்கிறது.
- இந்தக் கருத்தரங்கில் இந்தியப் பெருங்கடலில் நிரந்தரமான நிலப் பிராந்தியத்தைக் கொண்டுள்ள 24 நாடுகள் மற்றும் 8 பார்வையாளர் நாடுகள் ஆகியவை பங்கேற்கின்றன.

Post Views:
607