இந்தியப் பெருங்கடல் விளிம்போர நாடுகள் சங்கத்தின் (IORA) 24வது கூட்டம்
- IORA நாடுகளின் அமைச்சர்கள் குழுவின் 24வது கூட்டம் ஆனது, IORA அமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ள இலங்கையினால் காணொளி வாயிலாக நடத்தப் பட்டது.
- "Sustainable Indian Ocean for Future Generation" என்பது இந்தக் கூட்டத்தின் கருத்துருவாகும்.
- இதில் 22 IORA உறுப்பினர் நாடுகளும், IORA அமைப்பின் 12 பேச்சுவார்த்தைப் பங்குதார நாடுகளும் பங்கேற்றன.
- உறுப்பினர் நாடுகள் 'கொழும்பு கூட்டறிக்கையை' ஏற்றுக் கொண்டன.
- இந்தியா தற்போது IORA அமைப்பின் துணைத் தலைமைப் பொறுப்பிலும், மும்மைத் தலைமைகளின் ஒரு பகுதியாகவும் உள்ளது.
- IORA அமைப்பின் 2025-2027 ஆம் ஆண்டிற்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்க உள்ளது.

Post Views:
75