இந்தியப் பொருளாதார வீழ்ச்சி – 5வது இடத்திலிருந்து 7வது இடம்
August 3 , 2019 2201 days 1004 0
உலக வங்கியினால் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்ட தரவின் படி, 2018 ஆம் ஆண்டின் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தி தரவரிசையில் இந்தியா 7வது இடத்திற்குச் சென்றுள்ளது.
2018 ஆம் ஆண்டின் தரவின்படி, உலக GDP தரவரிசையில் ஐக்கிய இராஜ்ஜியம் 5வது இடத்தையும் பிரான்சு 6வது இடத்தையும் மீண்டும் பிடித்து இந்தியாவை முந்தியுள்ளன.
இந்தத் தரவரிசைப் பட்டியலில் 20.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDP மதிப்புடன் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்து இந்தப் பட்டியலில் 13.6 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDP மதிப்புடன் சீனா 2-வது இடத்தையும் 5 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDP மதிப்புடன் ஜப்பான் 3-வது இடத்தையும் பிடித்துள்ளது.
இந்தியா 2018 ஆம் ஆண்டில் 2.73 டிரில்லியன் அமெரிக்க டாலர் என்ற GDPஐ பதிவு செய்துள்ளது.
தற்போதைய அரசு 2025 ஆம் ஆண்டிற்குள் 5 டிரில்லியன் டாலர் பொருளாதார நாடாக இந்தியாவை மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொருளாதார வல்லுநர்களின்படி நாணய நிலைத் தன்மையின்மை மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஆகியவை காரணமாக உலக GDP தரவரிசையில் இந்தியா 7-வது இடத்திற்குச் சென்றுள்ளது.