இந்தியப் போட்டி ஆணையத்தின் தெற்கு பிராந்திய அலுவலகம்
March 4 , 2021 1625 days 767 0
மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் அமைச்சரான நிர்மலா சீதாராமன் அவர்கள் காணொலி வாயிலாக சென்னையில் இந்தியப் போட்டி ஆணையத்தின் (CCI - Competition Commission of India) தெற்குப் பிராந்திய அலுவலகத்தை திறந்து வைத்தார்.
CCI நிறுவனத்தின் சென்னைப் பிரிவு அலுவலகமானது தில்லிப் பிரிவு அலுவலகத்தின் ஒத்துழைப்புடன் அமலாக்கம், விசாரணை மற்றும் பரிந்து பேசுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ளும் ஒரு அலுவலகமாகச் செயல்படும்.
இந்தப் பிராந்திய அலுவலகமானது தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா மற்றும் ஒன்றியப் பிரதேசங்களான புதுச்சேரி மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றின் தேவையைப் பூர்த்தி செய்ய உள்ளது.