இந்தியாவும் யூரேசிய பொருளாதார ஒன்றியமும் (EAEU) தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் (FTA) பேச்சுவார்த்தைகளைத் தொடங்குவதற்கான ஆய்வு வரையறை விதிமுறைகளில் (ToR) கையெழுத்திட்டன.
EAEU ஒன்றியத்தில் ரஷ்யா, ஆர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான் மற்றும் கிர்கிஸ் குடியரசு ஆகியவை 6.5 டிரில்லியன் டாலர் மதிப்பிலான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளன.
இந்தியாவிற்கும் EAEU ஒன்றியத்திற்கும் இடையிலான வர்த்தகம் 2024 ஆம் ஆண்டில் 69 பில்லியன் டாலரை எட்டியது என்பதோடு இது 2023 ஆம் ஆண்டில் இருந்ததை விட 7% அதிகரிப்பைக் குறிக்கிறது.
FTA ஆனது இந்திய ஏற்றுமதியாளர்களுக்கான சந்தை அணுகலை அதிகரிப்பதையும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை நிறுவனங்களுக்கு (MSME) பயனளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.