TNPSC Thervupettagam

இந்தியா-அமெரிக்கா ஜாவெலின் எறிகணை ஒப்பந்தம்

August 30 , 2026 18 days 102 0
  • வெளிநாட்டு இராணுவ விற்பனை (FMS) செயல்முறையின் மூலம் ஜாவெலின் பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட எறிகணை அமைப்பைக் கொள்முதல் செய்வதற்காக இந்தியா அமெரிக்காவுடன் சலுகை மற்றும் ஏற்பு கடிதத்தில் (LOA) கையெழுத்திட்டது.
  • FGM-148 ஜாவெலின் என்பது மனிதர்களால் எடுத்துச் செல்லக்கூடிய, ஏவிய பிறகு மறக்கக்கூடிய (fire-and-forget), நடுத்தர தூர பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டப்பட்ட எறிகணையாகும், இது கவச வாகனங்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட நிலைகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது.
  • RTX மற்றும் லாக்ஹீட் மார்ட்டின் (Lockheed Martin) ஆகியவற்றை உள்ளடக்கிய ஜாவெலின் கூட்டு முயற்சியால் ஜாவெலின் தயாரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் சாத்தியமான கூட்டு உற்பத்தியை ஆராய்வதற்காக பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் (BDL) 2025 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஜாவெலின் கூட்டு முயற்சியுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • 100 ஜாவெலின் எறிகணைகள் மற்றும் 216 எக்ஸ்காலிபர் பீரங்கி குண்டுகள் உள்ளடங்கிய சாத்தியமான விற்பனைக்கு அமெரிக்கா 2025 ஆம் ஆண்டு நவம்பரில் தனித்தனி வழக்குகளின் கீழ் ஒப்புதல் அளித்திருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்