இந்தியா-ஆசியான் எண்ணிமச் செயல்பாட்டுத் திட்டம் 2023
March 8 , 2023 1227 days 629 0
இந்தியாவுடனான 3வது ASEAN எண்ணிம அமைச்சர்கள் (ADGMIN) கூட்டமானது காணொளி வாயிலாக நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது 2023 ஆம் ஆண்டு இந்தியா-ஆசியான் எண்ணிமச் செயல்பாட்டுத் திட்டமானது அங்கீகரிக்கப் பட்டது.
இந்தத் திட்டத்தில், இணையவெளிப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவு, அடுத்தத் தலைமுறை தொழில்நுட்பம் சார்ந்த திறன்மிகு நகரங்களில் இணைய உலக வலை அமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற துறைகளில் திறன் மேம்பாடு மற்றும் தகவல் பகிர்வு மற்றும் எண்ணிம வளம் & பாதுகாப்பு ஆகியவற்றினைச் செயல்படுத்துவதில் தகவல்தொடர்புத் தொழில்நுட்பங்களின் பங்கு ஆகியவை அடங்கும்.
இந்தக் கூட்டத்திற்கான கருத்துரு, "நிலையான எண்ணிமம் சார்ந்த எதிர்காலத்தை நோக்கிய ஒருங்கிணைப்பு" என்பதாகும்.
தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியா மற்றும் ASEAN கூட்டமைப்பு நாடுகள் ஆகியவற்றிற்கு இடையிலான பலத்தை மேம்படுத்துவதே இந்தக் கூட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.