இந்தியா - ஆசியான் முக்கூட்டு வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு
July 14 , 2019 2223 days 786 0
விரிவான பிராந்தியப் பொருளாதாரக் கூட்டுறவு (Regional Comprehensive Economic Partnership - RCEP) மீதான அதிகாரப் பூர்வமற்ற கலந்தறிதலுக்காக இந்தியா - ஆசியான் முக்கூட்டு வர்த்தக அமைச்சர்கள் சந்திப்பு புது தில்லியில் நடத்தப் பட்டது.
இந்தச் சந்திப்பானது மத்திய வணிக & தொழில் துறை மற்றும் இரயில்வே துறை அமைச்சரான பியூஷ் கோயலால் கலந்து கொள்ளப்பட்டது.
இந்தியப் பொருட்களுக்கு சீனாவுடனான சந்தை அணுகல் பிரச்சினைகள் மிகக் குறிப்பாக சிக்கலானவை என்று அவர் அங்கு வலியுறுத்தினார்.
RCEP என்பது பின்வருவனவற்றிற்கிடையே பரிந்துரைக்கப்பட்ட ஒரு வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தமாகும்.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கட்டமைப்பின் (Association of Southeast Asian Nations - ASEAN) 10 உறுப்பினர் நாடுகள் (புருனேய், கம்போடியா, இந்தோனேஷியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம்).
ஆசியாவில் தற்பொழுதுள்ள வர்த்தகத் தடையற்ற ஒப்பந்தங்களைக் கொண்ட இந்தோ - பசிபிக் நாடுகள் (சீனா, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து).