இந்தியா - ஆப்பிரிக்கா பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டம்
February 2 , 2020
1983 days
695
- ராணுவக் கண்காட்சி (DefExpo) வரலாற்றில் முதல் முறையாக, இந்தியாவும் ஆப்பிரிக்காவும் தங்கள் நாடுகளின் பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதிக்க உள்ளன.
- இந்தியாவின் மிகப்பெரிய பாதுகாப்புக் கண்காட்சி 2020 பிப்ரவரி 5 முதல் 2020 பிப்ரவரி 8 வரை லக்னோவில் நடைபெற உள்ளது.
- இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, இந்தியா - ஆப்பிரிக்கா பாதுகாப்பு மாநாடு நடைபெற உள்ளது.
- இந்தியா - ஆப்பிரிக்கா பாதுகாப்பு மாநாடானது 2020 பிப்ரவரி 6 அன்று நடைபெற உள்ளது.
- இந்த மாநாட்டில் சுமார் 24 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.
- பல ஆப்பிரிக்க நாடுகளின் காலனித்துவத்திற்குப் பிந்தைய ஆட்சியில் இராணுவத் தளங்களை அமைக்க இந்தியா உதவியுள்ளது.
- நைஜீரியாவில் பாதுகாப்புத் துறைக் கல்லூரி, எத்தியோப்பியாவில் இராணுவ அகாடமி, கானாவில் விமானப்படை ஆகியவற்றை இந்தியா அமைத்துள்ளது.
Post Views:
695