இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்புப் பேச்சுவார்த்தையை, ஒரு வழக்கமான நிகழ்வாக, இரு வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் ராணுவக் கண்காட்சியான டெஃப்-எக்ஸ்போ என்ற நிகழ்வை ஒட்டி நடத்த இந்திய அரசு முன்மொழிந்துள்ளது.
முதல் இந்தியா-ஆப்பிரிக்கா பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாடானது 2020 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் லக்னோவில் நடத்தப்பட்ட டெஃப்-எக்ஸ்போ கண்காட்சியில் நடத்தப் பட்டது.
இரண்டாவது இந்தியா - ஆப்பிரிக்கா பாதுகாப்புப் பேச்சுவார்த்தையானது 2022 ஆம் ஆண்டில் மார்ச் மாதத்தில் குஜராத்தின் காந்திநகரில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள டெஃப்-எக்ஸ்போ என்ற நிகழ்வை ஒட்டி நடைபெறும்.
2வது இந்தியா ஆப்பிரிக்கா பாதுகாப்புப் பேச்சுவார்த்தையின் கருத்துருவானது ‘India – Africa: Adopting Strategy for Synergizing and Strengthening Defence and Security Cooperation' என்பதாகும்.