இந்திய இணையம் மற்றும் கைபேசி மன்றமானது (IAMAI - Internet And Mobile Association of India) “இந்தியா இணையம் 2019” என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இணைய ஊடுருவல் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் 100 நபர்களில் 12 வயதுக்கு மேற்பட்ட இணையத்தைப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையாக வரையறுக்கப்படுகின்றது.
இந்த அறிக்கையின் படி, தேசியத் தலைநகர்ப் பகுதியான தில்லியில் (69%) இணைய ஊடுருவல் விகிதம் மிக அதிகமாக உள்ளது. இதைத் தொடர்ந்து கேரளாவில் (54%) இணைய ஊடுருவல் அதிகமாக உள்ளது.
இணைய ஊடுருவல் வீதமானது ஒடிசா (25), ஜார்க்கண்ட் (26), பீகார் (28) ஆகிய மாநிலங்களில் மிகக் குறைவாக இருக்கின்றது.
மேலும் கேரளா, தமிழ்நாடு மற்றும் தில்லி ஆகியவற்றில் பெண் இணையப் பயனர்கள் அதிகம் உள்ளனர் என்றும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராமப்புற மற்றும் நகர்ப்புற இணைய இணைப்புகளின் எண்ணிக்கையில் பெரும் இடைவெளியைக் கொண்ட மாநிலங்களில் கேரளாவும் இடம் பெற்றுள்ளது.