TNPSC Thervupettagam

இந்தியா-இரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையேயான 19-வது வருடாந்திர உச்சி மாநாடு

October 8 , 2018 2397 days 737 0
  • இந்தியா-இரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையேயான 19-வது வருடாந்திர உச்சி மாநாடு புது தில்லியின் ஹைதராபாத் இல்லத்தில் நடைபெற்றது.
  • இந்தியா இரஷ்யாவிடமிருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான 5.43 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன.
  • இது அமெரிக்காவின் எதிரிகளை பொருளாதாரச் சட்டத்தின் மூலம் எதிர்ப்பது (CAATSA - Countering Adversaries through Sanctions Act) என்ற சட்டத்தின்படி இந்தியாவின் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிக்க வழிவகுக்கும்.

        S - 400

  • S-400 என்ற ஏவுகணையானது S-300 என்ற ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட அமைப்பாகும்.
  • இந்த S-400 ஏவுகணையானது தரையிலிருந்து பாய்ந்து சென்று எதிரி நாட்டு விமானங்கள்/ஏவுகணைகளை வான் பரப்பிலேயே தாக்கி அழிக்கும் அமைப்பாகும்.
  • 2007 ஆம் ஆண்டு முதல் இரஷ்யாவில் பயன்பாட்டில் இருக்கும் இந்த ஏவுகணை அல்மேஸ் அண்டே என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்