2019 ஆம் ஆண்டின் இந்திய ஊழல் ஆய்வின் படி, ராஜஸ்தான் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்கள் ஊழல் தொடர்பானவற்றில் நாட்டில் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. ராஜஸ்தான் மாநிலத்தில் 78 சதவிகிதத்தினரும் பீகார் மாநிலத்தில் 75 சதவிகிதத்தினரும் லஞ்சம் கொடுப்பதாக ஒப்புக் கொண்டுள்ளனர். இந்த ஆய்வில் தெலுங்கானா மாநிலம் தென்னிந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.
இந்த ஆய்வானது 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப் பட்டது. இது லோக்கல் சர்கில்ஸ் என்ற ஒரு சமூக ஊடக நிறுவனம் மற்றும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் இந்தியா என்ற அமைப்பு ஆகியவற்றினால் இணைந்து மேற்கொள்ளப் பட்டது.
இந்த ஆய்வில் ராஜஸ்தான் மாநிலத்தைத் தொடர்ந்து பீகார் மாநிலமானது இரண்டாவது இடத்தில் தரவரிசைப்படுத்தப் பட்டுள்ளது.
மிகவும் ஊழல் நிறைந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் ஏழாவது இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 62% மக்கள் தங்கள் வேலையைச் செய்வதற்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக் கொள்கின்றனர்.
கேரள மாநிலத்தைத் தவிர, கோவா, குஜராத், ஒடிசா, மேற்கு வங்கம், ஹரியானா மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் ஊழல் குறைந்த மாநிலங்களாகும்.