இந்தியா-ஐக்கியப் பேரரசு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் 2025
May 10 , 2025 10 days 52 0
மூன்று ஆண்டு கால பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு இந்தியாவும் ஐக்கியப் பேரரசும் ஒரு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (FTA) கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது, 2040 ஆம் ஆண்டு முதல் இந்த இரு நாடுகளுக்கு இடையிலான இரு தரப்பு வர்த்தகத்தினை ஆண்டிற்கு சுமார் 25.5 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்க் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகமானது, 2024 ஆம் ஆண்டில் மொத்தம் 42.6 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்க் ஆக இருந்தது.
இந்தியாவிற்கு மேற்கொள்ளப்படும் ஐக்கியப் பேரரசின் மொத்த ஏற்றுமதிகள் 17.1 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்காகவும், இந்தியாவிலிருந்து ஐக்கியப் பேரரசிற்கு மேற் கொள்ளப் படும் மொத்த இறக்குமதிகள் 2024 ஆம் ஆண்டில் 25.5 பில்லியன் பவுண்ட் ஸிடெர்லிங்காகவும் இருந்தன.
கடந்த ஆண்டு இந்தியாவானது பிரிட்டனின் 11வது பெரிய வர்த்தகப் பங்குதார நாடாக இருந்தது.