இந்தியா - ஐக்கியப் பேரரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்
July 28 , 2025 6 days 39 0
2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கையெழுத்தான இந்தியா-ஐக்கியப் பேரரசு தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஆனது 2030 ஆம் ஆண்டிற்குள் இருதரப்பு வர்த்தகத்தினை இரட்டிப்பாக்கி 120 பில்லியன் டாலராக உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தமானது, ஐக்கியப் பேரரசிற்கான இந்திய ஏற்றுமதிகளில் 99% மீதான வரிகளை நீக்குகிறது மற்றும் பத்து ஆண்டுகளுக்குள் 85% பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுவதுடன் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் 90% ஐக்கியப் பேரரசு பொருட்களின் மீதான வரிகளைக் குறைக்கிறது.
இது இந்தியாவின் ஏற்றுமதியை ஆண்டுதோறும் 5 பில்லியன் டாலர் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல இந்தியத் தயாரிப்புகள் மீதான 4% முதல் 70% வரையிலான வரிகளை ஐக்கியப் பேரரசு நீக்கியது.
இது குறிப்பாக குஜராத், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் உள்ள கிராமப்புற மற்றும் சிறு தொழில்களை ஆதரிக்கும்.
இந்த ஒப்பந்தமானது, ஜவுளி ஏற்றுமதியில் மட்டும் 5 பில்லியன் டாலர் லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் வங்காளதேசம் மற்றும் வியட்நாம் போன்ற போட்டி நாடுகளுக்கு எதிராக இந்திய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடைகள் துறையின் போட்டித் தன்மையை அதிகரிக்கிறது.
சுமார் 16% வரை வரிகளை நீக்குவதன் மூலம் தோல் பொருட்கள் மற்றும் காலணி ஏற்றுமதிகள் அதிகரிக்கும்.
இரத்தினக் கற்கள் மற்றும் நகை ஏற்றுமதிகள் வரிகள் இல்லாமல் மேற்கொள்ளப் படுகின்றன.
பொறியியல் பொருட்கள், வாகனக் கூறுகள், இயந்திரக் கூறுகள் மற்றும் கரிம ரசாயனங்கள் ஆகியவை வரி நீக்கத்தால் பயனடைகின்றன.
இந்த ஒதுக்கீட்டின் கீழ் வாகனங்களுக்கான/ஆட்டோமொபைல்களுக்கான வரிகள் 100 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த நிலையில் இருந்து 10% ஆகக் குறைக்கப் பட்டு உள்ளன என்பதோடு இது இந்திய வாகன பாகங்கள் மற்றும் இயந்திர ஏற்றுமதிகளுக்கு உதவுகிறது.
இறால் மற்றும் உறைந்த/பதப்படுத்தப்பட்ட இறால் போன்ற கடல்சார் பொருட்களின் ஏற்றுமதிகள் வரிகள் இல்லாமல் இயங்குகின்றன என்பதோடு இது 5.4 பில்லியன் டாலர் மதிப்பிலான ஐக்கியப் பேரரசு சந்தைக்கு வாய்ப்பளித்து கேரளா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசாவில் உள்ள கடலோரச் சமூகங்களுக்குப் பயனளிக்கிறது.
வேளாண்மை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆனது 95% பொருட்களுக்கு வரி இல்லாத அணுகலைப் பெறுகின்றன.
ஐக்கியப் பேரரசு ஆனது 99.3% விலங்கு பொருட்கள், 100% கடல் சார் பொருட்கள் மற்றும் இரசாயனங்கள், நெகிழிகள், மின் இயந்திரங்கள் மற்றும் அடிப்படை உலோகங்கள் போன்ற முக்கியத் தொழில்துறைப் பொருட்களுக்கான வரிகளை நீக்குகிறது, சந்தை அணுகலை விரிவுபடுத்துகிறது மற்றும் வர்த்தகச் செலவுகளைக் குறைக்கிறது.