இந்தியா-ஐரோப்பிய ஒன்றியத்தின் முதல் பாதுகாப்புக் கூட்டாண்மை
January 31 , 2026 203 days 250 0
இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் (EU) தங்களின் முதல் விரிவான பாதுகாப்பு மற்றும் தற்காப்புக் கூட்டாண்மையில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம் இந்தியாவில் நடைபெற்ற 77வது குடியரசு தின கொண்டாட்டங்களின் போது கையெழுத்திடப்பட்டது.
இது கடல்சார் பாதுகாப்பு, பாதுகாப்புசார் தொழில்தொழில், இணைய வெளி அச்சுறுத்தல்கள், பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பாதுகாப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதனுடன், ரகசிய தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்காக, ஒரு தகவல் பாதுகாப்பு ஒப்பந்தம் (SOIA) குறித்த பேச்சுவார்த்தைகளையும் இரு தரப்பினரும் தொடங்கினர்.
இந்தக் கூட்டாண்மையானது, “2030-ஐ நோக்கி: இந்தியா–ஐரோப்பிய ஒன்றியம் கூட்டு விரிவான மூலோபாய நிகழ்ச்சி நிரல்” என்ற ஒரு மூலோபாயச் செயல் திட்டத்தை உள்ளடக்கியது.
இந்தச் செயல் திட்டமானது செழிப்பு, தொழில்நுட்பம், பாதுகாப்பு, இணைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.