TNPSC Thervupettagam

இந்தியா - ஓமன் உத்திசார் கூட்டாண்மை

June 4 , 2026 10 days 120 0
  • இந்தியா - ஓமன் விரிவான பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (CEPA) 2026 ஆம் ஆண்டு ஜூன் 1 அன்று நடைமுறைக்கு வந்தது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், 2022-23 ஆம் ஆண்டின் சராசரியின் அடிப்படையில் இருதரப்பு வர்த்தக மதிப்பில் 99.38 சதவீதத்தை உள்ளடக்கிய, ஓமனின் 98.08% சுங்கவரிப் பொருட்களுக்கு இந்தியா வரியற்ற சலுகையைப் பெறும்.
  • ஜவுளி, விவசாயப் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், ரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள் மற்றும் போக்குவரத்து உபகரணங்கள் போன்ற இந்திய ஏற்றுமதிப் பொருட்கள் ஓமன் சந்தையில் உடனடியாக வரியற்ற அணுகலைப் பெறும்.
  • நிறுவனங்களுக்கு இடையிலான பணியிட மாற்றங்களுக்கான அதிக ஒதுக்கீடு மற்றும் வணிகப் பார்வையாளர்களுக்கான எளிதாக்கப்பட்ட தற்காலிக நுழைவு உள்ளிட்ட, இந்தியத் தொழில் வல்லுநர்களின் எளிதான நடமாட்டத்திற்கும் இந்த ஒப்பந்தம் வழிவகை செய்கிறது.
  • மொரிஷியஸுடன் விரிவான பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மை ஒப்பந்தம் (CECPA - 2021), ஐக்கிய அரபு அமீரகத்துடன் CEPA (2022), ஆஸ்திரேலியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (ECTA - 2022), ஐரோப்பிய சுதந்திர வர்த்தகக் கூட்டமைப்புடன் வர்த்தக மற்றும் பொருளாதாரக் கூட்டாண்மை ஒப்பந்தம் (TEPA - 2024), மற்றும் ஓமனுடன் CEPA (2026) என இது போன்ற ஐந்து முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • 2025-26 ஆம் ஆண்டில் இந்தியா - ஓமன் இடையேயான இருதரப்பு வர்த்தகம் 11.18 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்