TNPSC Thervupettagam

இந்தியா-ஓமன் துறைமுக ஒத்துழைப்பு

September 19 , 2026 8 hrs 0 min 37 0
  • ஓமன் இந்திய வணிகர்களை சோஹார் துறைமுகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து ள்ளது, இது ஹார்முஸ் நீர்ச்சந்தியில் இருந்து விலகி வளைகுடா எரிசக்தி வளங்களை அணுகுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
  • சோஹார் துறைமுகம் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் இருந்து தள்ளி ஓமனின் ஓமன் வளைகுடா கடற்கரையில் அமைந்துள்ளது.
  • இது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் கிழக்கு சவுதி அரேபியாவின் முக்கிய எரிசக்தி குழாய்களுக்கு அருகில் உள்ளது.
  • இத்துறைமுகம் 30 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான முதலீடுகளைப் பெற்று உள்ளதுடன் ஆண்டுதோறும் 72 மில்லியன் டன் சரக்குகளைக் கையாள்கிறது.
  • இந்திய முதலீடு, வர்த்தகம் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்க சோஹார் துறைமுகம் மற்றும் அதன் தடையற்ற வர்த்தக மண்டலத்தை ஓமன் ஊக்குவித்து வருகிறது.
  • முன்னதாக, ஓமன் துக்ம் மற்றும் சலாலா துறைமுகங்களை இந்தியாவிற்கு வழங்கி இருந்தது.
  • வரவிருக்கும் ஓமன்-ஐக்கிய அரபு அமீரகம் ரயில் இணைப்பானது சோஹாரை ஐக்கிய அரபு அமீரகம் ரயில் கட்டமைப்புடன் இணைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்