இந்தியா கஜகஸ்தான் – கூட்டு நடவடிக்கை “பிரபல் தோஸ்த்க் 2017”
November 3 , 2017 2740 days 921 0
இந்தியாவிற்கும் கஜகஸ்தானிற்கும் இடையேயான இருதரப்பு ராணுவப் பயிற்சி நடவடிக்கையான “பிரபல் தோஸ்த்க் 2017” இமாச்சலப் பிரதேசத்தின் பாக்லோஷ் என்ற பகுதியில் தொடங்கியது.
“பலமான நட்பு” என்ற பொருள்படும் பிரபல் தோஸ்த்க் பயிற்சி நடவடிக்கை கூட்டு இராணுவப் பயிற்சி நடவடிக்கையின் இரண்டாவது பதிப்பாகும். 2016-ல் இது கஜகிஸ்தானின் காரகாந்தா பகுதியில் நடத்தப்பட்டது.
இது 14 நாட்கள் நடத்தப்படும் பயிற்சி நடவடிக்கையாகும்.
இது இரு நாட்டு ராணுவங்களினிடையே பலமான நட்புறவை ஏற்படுத்தவும் திறன் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளவும் நடத்தப்படுகிறது.
இந்தப் பயிற்சிக்கான குழுவானது, 11வது கூர்க்கா துப்பாக்கிப் படைப் பிரிவின் இந்திய வீரர்களையும் , அதே அளவு கஜகஸ்தான் இராணுவப்படைகளையும் கொண்டதாகும்.