TNPSC Thervupettagam

இந்தியா-கானா இடையிலான புதிய கூட்டாண்மை

July 8 , 2025 15 hrs 0 min 30 0
  • 30 ஆண்டுகளுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு இந்தியப் பிரதமர் கானாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அதிபர் ஜான் மஹாமாவைச் சந்தித்தார்.
  • இரு நாட்டுத் தலைவர்களும் இந்தியா-கானா இடையிலான உறவுகளை ஒரு விரிவான கூட்டாண்மையாக மேம்படுத்திட நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் அவர்கள் கையெழுத்திட்டனர்.
    • முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆனது கலை, இசை மற்றும் இலக்கியத்தில் கலாச்சாரப் பரிமாற்றத்திற்கானது.
    • இரண்டாவது புரிந்துணர்வு ஒப்பந்தமானது இந்திய மற்றும் கானா தரநிலை அமைப்புகளை (BIS மற்றும் GSA) ஒருங்கிணைப்பதற்கானது.
    • மூன்றாவது புரிந்துணர்வு ஒப்பந்தமானது பாரம்பரிய மருத்துவக் கல்வி மற்றும் பயிற்சியில் கவனம் செலுத்துவதற்கானது.
    • நான்காவது புரிந்துணர்வு ஒப்பந்தமானது வழக்கமான விவாதங்களுக்கான கூட்டு ஆணையத்தை உருவாக்குவதற்கானது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்