இந்தியா - குவைத் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம்
May 17 , 2018 2544 days 882 0
மத்திய நேரடி வரிகள் வாரியமானது, இந்தியா-குவைத் இடையிலான இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை (Double Taxation Avoidance Agreement - DTAA) திருத்துவதற்கான நெறிமுறையை வெளியிட்டுள்ளது.
இரட்டை வரிவிதிப்பை தவிர்ப்பதற்காகவும், வருமானத்தின் மீதான வரிகளைப் பொறுத்து வரி ஏய்ப்பைத் தவிர்ப்பதற்காகவும் இவ்வொப்பந்தம் ஜூன் 2006ல் இரு நாடுகளுக்கிடையே கையெழுத்திடப்பட்டது.
தற்போதைய DTAA வை திருத்தம் செய்யும் இந்த நெறிமுறையானது மார்ச் 2018 ல் அமலுக்கு வந்தது.
இந்த திருத்தப்பட்ட ஒப்பந்தமானது, சர்வதேச தரநிலைகளுக்கேற்ப தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்காக DTAAவின் கூறுகளை மாற்றியமைக்கும் (Updates the provisions).