கோஸ்டாரிகாவின் தலைநகரான சான் ஜோஸில் (San José) இந்தியா தனது தூதரகத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது.
முன்னதாக, பனாமாவில் உள்ள தனது தூதரகம் மற்றும் சான் ஜோஸில் உள்ள ஒரு கௌரவ தூதரகத்தின் மூலம் கோஸ்டாரிகாவுடனான உறவுகளை இந்தியா நிர்வகித்து வந்தது.
இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு மற்றும் மருந்தாக்கம் மற்றும் தகவல் தொழில் நுட்பம் (IT) ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதை இந்தத் தூதரகம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள கோஸ்டாரிகாவின் வடக்கே நிகரகுவாவும், தென் கிழக்கே பனாமாவும், கிழக்கே கரீபியன் கடலும், மேற்கே பசிபிக் பெருங்கடலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
இப்பகுதியுடனான ஈடுபாட்டை விரிவுபடுத்துவதற்கும், இந்திய குடிமக்களுக்கான தூதரக உதவியை மேம்படுத்துவதற்குமான இந்தியாவின் 'ஃபோகஸ் லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன்' (Focus LAC) முன்னெடுப்பிற்கு இந்த நடவடிக்கை துணை புரிகிறது.