TNPSC Thervupettagam

இந்தியா-சீனா எல்லை ஒருமித்த கருத்து

August 31 , 2026 17 days 95 0
  • பெய்ஜிங்கில் நடைபெற்ற எல்லைப் பிரச்சனை குறித்த 25-வது சிறப்புப் பிரதிநிதிகளின் பேச்சுவார்த்தையின் போது இந்தியா மற்றும் சீனா எட்டுப் புள்ளி ஒருமித்த கருத்தை எட்டின.
  • இரு நாடுகளுக்கும் இடையிலான நடைமுறை எல்லையான உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டில் (LAC) அமைதியைப் பேணவும், பதற்றங்களைக் குறைக்கவும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.
  • கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் கூடுதலாக இரண்டு ராணுவ சந்திப்புப் புள்ளிகளும் இரண்டு புதிய இராணுவ அவசரத் தொலைபேசி இணைப்புகளும் நிறுவப் படும்.
  • ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான செயல்பாட்டு வழிமுறை (WMCC) எல்லை மேலாண்மை குறித்த விவாதங்களைத் தொடரும்.
  • எல்லை நிர்ணயம் குறித்த நிபுணர் குழு எல்லை தொடர்பான பிரச்சனைகளில் பணியாற்றும்.
  • எல்லை தாண்டிய நதிகள் மற்றும் நீரியல் தரவுப் பகிர்வு குறித்த அடுத்த நிபுணர் அளவிலான செயல்முறைக் கூட்டம் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் நடைபெறும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்