இந்தியா – சீனா கடல்வழி விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தை
July 16 , 2018 2614 days 812 0
இந்தியா-சீனா ஆகியவற்றுக்கிடையேயான இடையேயான 2வது கடல்வழி விவகாரங்களுக்கான பேச்சுவார்த்தை சீனாவில் உள்ள பெய்ஜிங்கில் 13 ஜூலை 2018 அன்று நடைபெற்றது.
இருதரப்பும் தமது இரண்டாவது கடல்வழி பாதுகாப்புக்கான பேச்சுவார்த்தையினை நடத்தியபோது சிங்கப்பூரில் இந்த வருடம் நடைபெற்ற ஷாங்க்ரி லா உரையாடலில் பிரதம மந்திரி மோடியின் தலைமை உரையில் வெளிப்படுத்தியது போல இந்திய-பசிபிக் பகுதிகளில் இந்தியாவின் பார்வையை இந்திய தரப்பு விவரித்தது.
கடல்வழி பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு, நீலப் பொருளாதாரம் மற்றும் பயிற்சி ஒத்துழைப்பினை கூடுதலாக வலிமைப்படுத்துதல் ஆகியவற்றின் மீதான கண்ணோட்டங்களைக் கொண்ட வெவ்வேறு விஷயங்களின் மீதான பரஸ்பர ஆர்வத்தினை இரு தரப்புகளும் பரிமாறிக் கொண்டன.
தெற்கு சீனக்கடலில் நிலவும் பதற்றங்களுக்கு மத்தியில் 2016-ம் ஆண்டு இரு நாடுகளும் கடல் வழி பாதுகாப்புக்கான பேச்சுவார்த்தையினை புது தில்லியில் தொடங்கின.
இந்த பேச்சுவார்த்தை கடந்த வருடம் (2017) நடைபெறவில்லை.