TNPSC Thervupettagam

இந்தியா-சீனா வர்த்தகப் பற்றாக்குறை 2025–26

March 21 , 2026 2 days 40 0
  • சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை முதல் முறையாக 100 பில்லியன் டாலர்களைத் தாண்டிய நிலையில் 2025–26 நிதியாண்டில் (ஏப்ரல்-பிப்ரவரி) சுமார் 102 பில்லியன் டாலர்களை எட்டியது.
  • வர்த்தகப் பற்றாக்குறை என்பது ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருப்பதைக் குறிக்கிறது.
  • இந்தியா சீனாவிலிருந்து மின்னணு பொருட்கள், இயந்திரங்கள், தொலைத்தொடர்பு உபகரணங்கள் மற்றும் APIs (மருந்து மூலப்பொருட்கள்) போன்ற அதிக மதிப்புள்ளப் பொருட்களை இறக்குமதி செய்கிறது.
  • சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதியில் முக்கியமாக பெட்ரோலியப் பொருட்கள், தாமிர பொருட்கள் மற்றும் சில மின்னணுப் பொருட்கள் அடங்கும் என்பதோடு இவை குறைந்த மதிப்பைக் கொண்டவை.
  • இது நடப்புக் கணக்குப் பற்றாக்குறை மற்றும் சில முக்கியத் துறைகளில் சீனாவின் இறக்குமதியைச் சார்ந்திருப்பது போன்ற பொருளாதார அபாயங்களை உருவாக்கச் செய்கிறது.
  • இது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஏற்றத்தாழ்வு மற்றும் குறைந்த அளவிலான சந்தை அணுகல் போன்ற சிக்கல்களையும் சுட்டிக்காட்டுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்