TNPSC Thervupettagam

இந்தியா-சீனா வர்த்தகப் பற்றாக்குறை 2026

October 16 , 2026 9 days 115 0
  • இந்திய ஏற்றுமதியில் 40.7% உயர்வு இருந்தபோதிலும், 2026 ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் மாத காலகட்டத்தில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 105.93 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு ஜனவரி-செப்டம்பர் காலகட்டத்தில் இந்தியா மற்றும் சீனா இடையேயான இருதரப்பு வர்த்தகம் 25.4% அதிகரித்து 144.45 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • சீனாவுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 19.26 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது, அதே வேளையில் சீனாவிலிருந்து இறக்குமதி 23.3% அதிகரித்து 125.19 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது.
  • கடல் உணவுப் பொருட்கள், நாப்தா மற்றும் அச்சிடப்பட்ட மின்சுற்றுப் பலகைகள் ஆகியவை சீனாவுக்கான இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களாகும்.
  • உரங்கள் மற்றும் அரிய வகை கனிமங்கள் போன்ற தயாரிப்புகள் மீதான சீனாவின் ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளும் இந்தியாவுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன.
  • 2025 ஆம் ஆண்டில் சீனாவுடனான இந்தியாவின் வர்த்தகப் பற்றாக்குறை 116.12 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்