TNPSC Thervupettagam

இந்தியா - சைப்ரஸ் உத்திசார் கூட்டாண்மை

May 31 , 2026 13 days 85 0
  • சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடோலிட்ஸ் இந்தியா வந்திருந்த போது, இந்தியாவும் சைப்ரஸும் தங்களது இருதரப்பு உறவுகளை உத்திசார் கூட்டாண்மையாக உயர்த்தின.
  • பயங்கரவாதத் தடுப்பு குறித்த கூட்டுப் பணிக்குழுவை அமைக்க இந்தியாவும் சைப்ரஸும் ஒப்புக் கொண்டதுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அனைத்து வகையான பயங்கரவாதத்திற்கும் எதிராக ஒன்றிணைந்து செயல்பட மீண்டும் உறுதியளித்தன.
  • இரு நாடுகளும் பயங்கரவாத தடுப்பு ஒத்துழைப்பு மற்றும் தூதரகப் பயிற்சி குறித்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
  • இணையப் பாதுகாப்பு உரையாடல், தூதரக விவகாரங்கள் குறித்த உரையாடல் மற்றும் இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கான வழிகாட்டுதல் (2026–2031) ஆகியவை புதிய முயற்சிகளில் அடங்கும்.
  • சைப்ரஸ், இந்தியாவிற்கான அந்நிய நேரடி முதலீட்டின் (FDI) 9-வது மிகப்பெரிய ஆதாரமாகவும், ஐரோப்பிய ஒன்றிய (EU) நாடுகளில் நெதர்லாந்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய நாடாகவும் உள்ளதுடன் 2000-ஆம் ஆண்டு முதல் சுமார் 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் ஒட்டுமொத்த முதலீடுகளைச் செய்து உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்