TNPSC Thervupettagam

இந்தியா-ஜப்பான் உத்திசார் கூட்டாண்மை

November 24 , 2026 4 days 78 0
  • 2027 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையிலும், 'இந்தியா-ஜப்பான் பகிரப்பட்ட எல்லைகளின் ஆண்டாகக்' கொண்டாடும் வகையிலும், 2026 ஆம் ஆண்டு நவம்பர் 19 அன்று இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் "பகிரப்பட்ட எல்லைகள்" என்ற வாசகத்துடன் கூடிய கூட்டு நினைவு இலச்சினையை வெளியிட்டன.
  • அமைதி ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததைத் தொடர்ந்து, 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 28 அன்று இந்தியாவும் ஜப்பானும் தூதரக உறவுகளை நிறுவின.
  • இந்த இலச்சினையில் 7 என்ற எண்ணில் இந்திய அலங்கார வடிவங்களும், 5 என்ற எண்ணில் ஜப்பானின் உதயசூரியன் மற்றும் செய்கைஹா (Seigaiha) அலைகளும், சூரியனைச் சுடராகக் கொண்ட அகல் விளக்கும், பகிரப்பட்ட எல்லையைக் குறிக்கும் இரண்டு அசையும் ரிப்பன்களும், இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தாமரையும் இடம் பெற்றுள்ளன.
  • Business Connect-75 இந்திய வணிகத் தொகுப்புகளுக்கும் ஜப்பானிய பிராந்திய வங்கிகள் மற்றும் நிறுவனங்களுக்கும் இடையிலான வணிகத் தொடர்புகளை வலுப்படுத்தும்.
  • MIRAI-VIGYAN-75 LUPEX (நிலவின் துருவப் பகுதி ஆய்வு) திட்டம் உள்ளிட்ட அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும்.
  • Empower Regional Linkage-75 ஆனது இந்திய மாநிலங்களுக்கும் ஜப்பானிய மாகாணங்களுக்கும் இடையிலான கூட்டாண்மையை வலுப்படுத்தும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்