ஜெர்மனியின் பிரதமரான ஏஞ்சலா மெர்க்கல் அரசாங்கங்களுக்கிடையேயான 5வது உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்திற்காக (Inter-Governmental Consultations - IGC) 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி முதல் நவம்பர் 1 ஆம் தேதி வரை இந்தியாவுக்கு வருகை புரிந்துள்ளார்.
‘மேக் இன் இந்தியா மிட்டல்ஸ்டாண்ட்’ (Make in India Mittelstand - MIIM) என்ற திட்டத்தின் வெற்றியை பிரதமர் மோடியும் ஜெர்மனியின் பிரதமரான மெர்க்கலும் வரவேற்றனர்.
MIIM ஆனது 135க்கும் மேற்பட்ட ஜெர்மனியின் மிட்டல்ஸ்டாண்ட் மற்றும் குடும்ப நிறுவனங்களுக்கு உதவியுள்ளது.
ஜெர்மன்-இந்தியன் ஸ்டார்ட்அப் பரிமாற்றுத் திட்டத்தின் (German Indian Start up Exchange Program - GINSEP) கீழ் மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பணியை அவர்கள் அங்கீகரித்ததோடு, “நெக்ஸ்ட் ஸ்டெப் இந்தியா” (Next Step India) என்று அழைக்கப்படும் இந்தியாவில் ஜெர்மனிய ஸ்டார்ட் அப்களுக்கான ஒரு திட்டத்தை அறிமுகப் படுத்தியதையும் வரவேற்றனர்.