TNPSC Thervupettagam

இந்தியா-ஜெர்மனி - காலநிலை தகவமைப்பு கூட்டாண்மை

March 2 , 2026 15 days 62 0
  • புது தில்லியில் நடைபெற்ற உயர்மட்ட காலநிலை பேச்சுவார்த்தையின் போது, ​​காலநிலை தகவமைப்பு மற்றும் மீள்தன்மை குறித்த ஒத்துழைப்பை இந்தியாவும் ஜெர்மனியும் விரிவுபடுத்தியுள்ளன.
  • சர்வதேச காலநிலை முன்முயற்சியின் (IKI) கீழ் இந்தியாவிற்கு சுமார் 20 மில்லியன் யூரோக்கள் வரை மானியம் வழங்குவதாக ஜெர்மனி அறிவித்துள்ளது.
  • இந்தத் திட்டம் இமயமலை, தீவுப் பிரதேசங்கள், மேற்குத் தொடர்ச்சி மலைகள், வட கிழக்கு மற்றும் கீழ் கங்கை வெள்ளப் பெருக்குப் பகுதிகளில் உள்ள பாதிக்கப்படக் கூடிய சூழலியல் அமைப்புகளில் கவனம் செலுத்தும்.
  • இது வன மறுசீரமைப்பு, பல்லுயிர் வழித்தடங்கள், வெள்ளம் மற்றும் அரிப்பு கட்டுப்பாடு, நிலத்தடி நீர் மறுசீரமைப்பு மற்றும் சமூகத்தினர் தலைமையிலான இயற்கை வள மேலாண்மை உள்ளிட்ட சூழலியல் சார்ந்த தழுவலை (EbA) ஊக்குவிக்கும்.
  • இந்த நிதியானது நீண்டகால நிலைத் தன்மைக்கான கலப்பு நிதி, பல்லுயிர் வரவுகள் மற்றும் காப்பீட்டு அடிப்படையிலான இடர்களுக்கான தீர்வுகளை ஆராயும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்