இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளின் கடற்படைகள் ஏடென் வளைகுடாவில் ஒரு கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டன.
இப்பயிற்சியில் ஹெலிகாப்டர் தரையிறக்கம், தேடல் மற்றும் கைப்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளும் அடங்கும்.
இந்தியக் கடற்படையின் போர்க் கப்பலான ‘திரிகந்த்’ என்ற கப்பலானது ஜெர்மனி நாட்டின் போர்க் கப்பலான ‘பெய்ரென்’ என்ற கப்பலுடன் இணைந்து இப்பயிற்சியில் ஈடுபட்டது.
ஏடென் வளைகுடா பகுதியில் கடற்கொள்ளைக்கு எதிரான ரோந்துப் பணிகளுக்காக ஐ.என்.எஸ். திரிகந்த் கப்பலானது பணியமர்த்தப் படும்.
இப்பயிற்சியானது கடல்சார் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒரு இணைச் செயல்பாட்டினை மேம்படுத்தவும் சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக் கொள்ளவும் உதவியது.
இந்தியா மற்றும் ஜெர்மனி ஆகியவை 2006 ஆம் ஆண்டில் கடற்கொள்ளை எதிர்ப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தினை மேற்கொண்ட பிறகு, இரு நாடுகளின் கடற்படைகளும் 2008 ஆம் ஆண்டில் முதலாவது கூட்டுப் பயிற்சியினை மேற்கொண்டன.