நமீபியாவின் தலைநகரான விண்ட்ஹோக்கில் நமீபிய அதிபர் நந்தி-நதைட்வாவுடன் இந்தியப் பிரதமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இது கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய ஐந்து நாடுகளுக்கான அவரது ஐந்து நாடுகளின் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதி ஆகும்.
இது நமீபியாவிற்கு அவர் மேற்கொண்ட முதல் பயணம் மற்றும் ஓர் இந்தியப் பிரதமர் அந்த நாட்டிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணமாகும்.
நமீபியா அரசு அவருக்கு நமீபியாவின் மிக உயர்ந்த குடிமை விருதான ஆர்டர் ஆஃப் தி மோஸ்ட் ஏன்சியன்ட் வெல்விட்சியா மிராபிலிஸ் விருதினை வழங்கியது.
இந்தியாவின் UPI பண வழங்கீட்டு முறையை அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட முதல் ஆப்பிரிக்க நாடாகவும் நமீபியா மாறியது.
இந்தியா தலைமையிலான பேரிடர் மீள்/தாங்கு உள்கட்டமைப்பு கூட்டணி மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணியில் இணையச் செய்வதற்கான முக்கியச் செயல்முறைகளையும் அது நிறைவு செய்தது.