TNPSC Thervupettagam

இந்தியா-நியூசிலாந்து விளையாட்டு ஒத்துழைப்பு 2026

March 17 , 2026 13 hrs 0 min 18 0
  • இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான விளையாட்டு உறவுகளின் 100 ஆண்டுகளை 2026 ஆம் ஆண்டு குறிப்பதால், இந்த இரு நாடுகளும் விளையாட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளன.
  • இது தொடர்பான உயர்மட்டக் கூட்டம் புதுடெல்லியில் மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது.
  • 1926 ஆம் ஆண்டு நியூசிலாந்திற்கு இந்திய ராணுவ ஹாக்கி குழு மேற்கொண்ட சுற்றுப்பயணத்தின் மூலம் இந்த விளையாட்டு உறவுகள் தொடங்கின.
  • ரக்பி, துடுப்பு படகுப் போட்டி, படகு சவாரி, படகோட்டம், தடகளம் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற விளையாட்டுகளை ஒத்துழைப்புக்காக இந்த இரு நாடுகளும் அடையாளம் கண்டுள்ளன.
  • இந்த ஒத்துழைப்பில் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (SAI) மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் (IOA) ஆகியவை இணைந்துள்ளன.
  • முன்மொழியப்பட்டுள்ள 'இந்தியா-நியூசிலாந்து நூற்றாண்டு விளையாட்டு ஒத்துழைப்புத் திட்டம் 2026', பயிற்சி முகாம்கள், பயிற்சியாளர் பரிமாற்றங்கள் மற்றும் விளையாட்டு அறிவியல் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்