TNPSC Thervupettagam

இந்தியா-பிரேசில் உயிரி எரிபொருள் கூட்டணி

August 9 , 2025 12 days 61 0
  • தெற்கு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் தூய்மையான எரிசக்தி மாற்றத்தில் வேரூன்றிய ஓர் உத்திசார் உயிரி எரிபொருள் கூட்டணியை இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் முன்னெடுத்துள்ளன.
  • இந்தக் கூட்டணியானது பகிரப்பட்ட பருவநிலை இலக்குகளுடன் ஒத்துழைப்பினை மேற்கொள்கிறது மற்றும் பசுமைத் தொழில்மயமாக்கல் மற்றும் கிராமப்புற மேம்பாட்டினை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சுங்க வரி சார்ந்த பதட்டங்கள் இருந்தபோதிலும், 2023 ஆம் ஆண்டில் G20 அமைப்பில் இந்தியாவின் தலைமையின் போது தொடங்கப்பட்ட உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி மூலம் இந்தியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா தொடர்ந்து ஒத்துழைப்பினை மேற்கொண்டு வருகின்றன.
  • பசுமை இல்ல வாயுக்கள் உமிழ்வினைக் குறைப்பதற்கும், எரிசக்திப் பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் எத்தனால் கலவை, நிலையான விமான எரிபொருள் மற்றும் கலவை எரிபொருள் தொழில்நுட்பங்களை இந்தக் கூட்டணி ஊக்குவிக்கிறது.
  • 2025 ஆம் ஆண்டிற்குள் 20 சதவீத எத்தனால் கலவை என்ற இந்தியாவின் இலக்கு பிரேசிலின் மேம்படுத்தப் பட்ட கரும்பு அடிப்படையிலான எத்தனால் தயாரிப்பு உள் கட்டமைப்புடன் ஒத்துப் போகிறது.
  • கரும்பிலிருந்துப் பெறப்பட்ட எத்தனால் மூலம் பிரேசில் அதன் வாகன எரிபொருள் தேவையில் 30 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை பூர்த்தி செய்கிறது.
  • இந்தியாவானது நெல், வைக்கோல், மக்காச்சோளம் போன்ற தீவனங்கள் மற்றும் பயன்படுத்தப் பட்ட சமையல் எண்ணெய் போன்றவற்றை அதன் எத்தனால் உற்பத்தி உத்தியில் ஒருங்கிணைக்கிறது.
  • 2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இயற்றப்பட்ட பிரேசிலின் 2025 ஆம் ஆண்டு எதிர்கால எரிபொருள்கள் சட்டத்தில் உயிரி டீசல் கலப்பை 14 சதவீதம் என்ற இலக்கிலிருந்து, 2030 ஆம் ஆண்டிற்குள் படிப்படியாக அதிகரிப்பதை  கட்டாயம் ஆக்குகிறது.
  • இந்தியாவின் கொள்கையானது, அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு மற்றும் நிலையான விமான எரிபொருள்களிலும் விரிவுபடுத்தும் திட்டங்களுடன் 10 சதவீத எத்தனால் கலப்பினை ஆதரிக்கிறது.
  • பிரேசிலின் பெட்ரோபிராஸ் அதன் 2025 ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் உயிரி டீசல் மற்றும் உயிரி மீத்தேன் திட்டங்களில் 600 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்கிறது.
  • நிலையான விமான எரிபொருள் ஆனது, உமிழ்வை 80 சதவீதம் வரை குறைக்கும், ஆனால் அதன் உலகளாவிய விநியோகம் இன்னும் குறைவாகவே உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்