TNPSC Thervupettagam

இந்தியா-பிரேசில் டிஜிட்டல் கூட்டாண்மை

August 25 , 2026 16 hrs 0 min 34 0
  • இந்தியா மற்றும் பிரேசில் இடையே புனேவில் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்கள் (ICT) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.
  • இந்த ஒப்பந்தம் செயற்கை நுண்ணறிவு (AI), 5G, 6G, திறந்த ரேடியோ அணுகல் வலையமைப்பு (Open RAN), பொருட்களின் இணையம் (IoT) மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (DPI), நேரடியாகச் சாதனத்துடன் இணைக்கும் வசதி (Direct-to-Device connectivity), அலைக்கற்றை மேலாண்மை மற்றும் குறைந்த புவி சுற்றுப்பாதை (LEO) செயற்கைக்கோள்கள் ஆகியவற்றில் ஒத்துழைப்பதும் இதில் அடங்கும்.
  • 12-வது பிரிக்ஸ் தகவல் தொடர்பு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் பிரிக்ஸ் ICT டிராக் கூட்டத்தின் போது இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இது 2026 ஆம் ஆண்டில் இந்தியா மற்றும் பிரேசிலின் தகவல் தொடர்பு அமைச்சகங்களுக்கு இடையிலான இரண்டாவது இருதரப்பு ஒப்பந்தமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்