TNPSC Thervupettagam

இந்தியா-பிரேசில் மூலோபாய கூட்டாண்மை

February 26 , 2026 17 hrs 0 min 3 0
  • பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவின் புது தில்லி வருகையின் போது இந்தியாவும் பிரேசிலும் 10 ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன.
  • இந்தியாவும் பிரேசிலும் ஐந்து ஆண்டுகளுக்குள் தங்கள் வர்த்தகத்தை 20 பில்லியன் அமெரிக்க டாலர்களாக அதிகரிக்க முடிவு செய்தன.
  • லத்தீன் அமெரிக்காவில் பிரேசில் இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளராகும்.
  • முக்கியமான கனிமங்கள் மற்றும் அருமண் கூறுகளில் ஒத்துழைக்க இரு நாடுகளும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பில் இணைந்து நன்கு பணியாற்றவும் அவர்கள் ஒப்புக் கொண்டனர்.
  • செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைகடத்தி தொழில்நுட்பத்தில் இந்த இருநாடுகளும் ஒத்துழைக்கும்.
  • சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இரு நாடுகளும் சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (MSMEகள்) ஆதரிக்க ஒப்புக் கொண்டன.
  • பாரம்பரிய அறிவு அமைப்புகளைப் பகிர்ந்து கொள்ளவும் அவர்கள் ஒப்புக் கொண்டு உள்ளனர்.
  • வெகுஜன தொடர்பு மற்றும் ஊடகங்களில் ஒத்துழைப்புக்கான ஒப்பந்தமும் தற்போது கையெழுத்தானது.
  • இரு தரப்பினரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் கூட்டு இராணுவப் பயிற்சிகளை வலுப்படுத்த முடிவு செய்தனர்.
  • BRICS, G20, சர்வதேச சூரிய சக்தி கூட்டணி, IBSA பேச்சுவார்த்தை மன்றம் மற்றும் G4 போன்ற சர்வதேச குழுக்களில் இந்தியாவும் பிரேசிலும் இணைந்து செயல்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்