TNPSC Thervupettagam

இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம்

August 16 , 2025 15 hrs 0 min 14 0
  • நடைபெற்று வரும் இஸ்ரேல்-காசா போர் ஆனது IMEC வழித்தடத்தின் முன்னேற்றத்தை சீர்குலைத்துள்ளது.
  • மேம்படுத்தப்பட்ட இணைப்பு மூலம் இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு கப்பல் போக்குவரத்து நேரத்தை சுமார் 40% குறைப்பதை இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • IMEC தடத்தின் பாதையில் இரண்டு பிரிவுகள் உள்ளன:
    • துறைமுகங்கள் மற்றும் இரயில் வழியாக இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் வளைகுடாவிற்கு, மற்றும்
    • இஸ்ரேலின் ஹைஃபா துறைமுகத்திலிருந்து கிரீஸ் மற்றும் இத்தாலி வழியாக ஐரோப்பாவிற்கான பிரிவு.
  • இந்தத் திட்டமானது, 2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் G20 தலைமைத்துவ காலத்தில் அறிவிக்கப்பட்டது.
  • இந்த மோதல் ஆனது, கப்பல் போக்குவரத்துக்கான அதிக காப்பீட்டுத் தவணைகள் போன்ற அபாயங்களை அதிகரிக்கிறது மற்றும் IMEC செயல்படுத்தலைக் குறை மதிப்பிற்கு உட்படுத்தும் புவிசார் அரசியல் பதட்டங்களை மோசமாக்குகிறது.
  • சவால்கள் இருந்தபோதிலும், UAE மற்றும் சவுதி அரேபியாவுடனான இந்தியாவின் வலுவான உறவுகள், இந்த வழித்தடத்தின் சில பகுதிகளை, குறிப்பாக இந்தியா-வளைகுடா பிரிவினைச் சாத்தியமானதாக வைத்திருக்கின்றன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்