கனடாவின் கனனாஸ்கிஸ் எனுமிடத்தில் நடைபெற்ற G7 உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் பங்கேற்றார்.
'ஆற்றல் பாதுகாப்பு: மாறி வரும் உலகில் அணுகல் மற்றும் மலிவு விலையை உறுதி செய்வதற்கான பல்வகைப் படுத்துதல், தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு' என்ற அமர்வில் அவர் உரையாற்றினார்.
2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் முறையாக புதிய உயர் ஆணையர்களை நியமிக்க இந்தியாவும் கனடாவும் ஒப்புக் கொண்டுள்ளன.
இதனுடன் சைப்ரஸ், கனடா மற்றும் குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு நான்கு நாட்கள் அளவிலான சுற்றுப் பயணத்தையும் பிரதமர் மேற்கொண்டார்.