TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான 33-வது ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சி

March 21 , 2019 2299 days 663 0
  • இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியின் 33-வது பதிப்பானது அந்தமான் நிக்கோபார் தீவின் போர்ட் பிளேயரில் நடைபெற்றது.
  • இது இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான இராஜதந்திர உறவுகளின் 70-வது ஆண்டுடன் ஒன்றிப் பொருந்துகின்றது.
  • இந்த ஒருங்கிணைந்த ரோந்துப் பயிற்சியானது பின்வருவனவற்றை எடுத்துக் கூற எண்ணுகின்றது.
    • இந்தியாவின் அமைதியான இருப்பு மற்றும் கடல்சார் அண்டை நாடுகளுடன் ஒற்றுமை
    • கடற்படைக் களத்தில் சிறந்த ஒழுங்குமுறைகளை உறுதிப்படுத்துதல்
    • இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஒருங்கிணைத்தல்
    • இந்தியா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கிடையேயான தற்பொழுதுள்ள நட்புறவு தொடர்பான பிணைப்புகளை வலுப்படுத்துதல்.
  • இந்தியாவின் சாகர் திட்டத்தின் கீழ் ஒரு பகுதியாக (பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கான பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி) இந்தியக் கடற்படையானது இந்திய கடல்சார் நாடுகளுக்கு உதவுவதோடு திறன் கட்டமைப்புத் திட்டத்தில் பங்கு கொள்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்