இந்திய மற்றும் இஸ்ரேல் அரசுகளானது புது டெல்லியில் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தில் (BIA) கையெழுத்திட்டன.
முதலீட்டாளர்களுக்கு அதிக உறுதிப்பாடு மற்றும் பாதுகாப்பை வழங்குவதையும், குறைந்தபட்ச தரமான நடவடிக்கைகளுடன் கூடிய வர்த்தகம் மற்றும் பரஸ்பர முதலீடுகளை எளிதாக்குவதையும் BIA நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது நடுவர் மன்றம், பறிமுதல் செய்வதற்கு எதிரான பாதுகாப்புகள் மற்றும் வெளிப்படைத் தன்மை, சுமூகமானப் பரிமாற்றங்கள் மற்றும் இழப்புகளுக்கான இழப்பீடு ஆகியவற்றிற்கான விதிமுறைகள் மூலம் ஒரு சுயாதீனமான தகராறு தீர்க்கும் நெறிமுறையை உள்ளடக்கியது.
இந்த ஒப்பந்தமானது தற்போது மொத்தம் 800 மில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ள இருதரப்பு முதலீடுகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப் படுவதோடு, இரு நாடுகளிலும் வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்களுக்குப் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.