இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையே அறிவுசார் சொத்துரிமை தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம்
April 3 , 2018 2683 days 836 0
அறிவுசார் சொத்துரிமை தொடர்பான விஷயங்களில் இருதரப்பு ஒத்துழைப்பை ஏற்படுத்த இந்தியா மற்றும் கனடாவிற்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 2018-ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த ஒப்பந்தம் இரு தரப்பிலும் புத்தாக்கம், புதுமை மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்திட வழிவகை செய்கிறது.
இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிலும் உள்ள அரசு, வியாபார மற்றும் கல்வி நிறுவனங்களில் அறிவுசார் சொத்துரிமைப் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பது தொடர்பான சிறந்த பயிற்சி முறைகள், அனுபவங்கள் மற்றும் தொழில்நுட்ப அறிவு ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ள உதவும்.