TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் சீனாவின் நிலக்கரி அதிகரிப்பு

September 6 , 2025 7 days 48 0
  • 2025 ஆம் ஆண்டில் உலகளாவிய புதிய நிலக்கரித் திறன் திட்டங்களில் சுமார் 87% பங்குடன், புதிய நிலக்கரி சார் மின் உற்பத்தித் திட்டங்களில் சீனாவும் இந்தியாவும் முன்னிலை வகிக்கின்றன.
  • சீனா முதன்மையாக கடந்த கால எரிசக்தி பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கும், எரிசக்தி பாதுகாப்பிற்கும் ஒரு தீர்வாக சுமார் ஒரு தசாப்தத்தில் அதன் அதிகபட்ச விகிதமாக வெறும் ஆறு மாதங்களில் 21 GW திறன் கொண்ட புதிய நிலக்கரி திறன் அமைப்பை உருவாக்கியது.
  • நிலக்கரி குவிப்பு இருந்த போதிலும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் (சூரிய, காற்று, நீர்) விரைவான விரிவாக்கத்தினால், 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சீனாவின் CO உமிழ்வு ~1% குறைந்துள்ளது.
  • 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா 5.1 GW திறன் கொண்ட புதிய நிலக்கரி ஆலைகளைத் தொடங்கியது என்பதோடு 2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் 92 GW அளவிலான கூடுதல் நிலக்கரித் திறன் கொண்ட ஒரு பெரிய திட்டம் முன்மொழியப் பட்டது.
  • இந்தியா அதன் மின்சார உற்பத்தியில் சுமார் 70% அளவிற்கு நிலக்கரியை இன்றும் பெரிதளவில் சார்ந்துள்ள நிலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மிகத் தீவிரமாக விரிவுபடுத்தும் அதே வேளையில் (2025 ஆம் ஆண்டிற்குள் 220 GW நிறுவப்பட்டது) ஒரு "இரட்டைப் பாதை" எரிசக்தி உத்தியைக் கொண்டுள்ளது.
  • நிலக்கரிப் பயன்பாட்டின் விரிவாக்கத்துடன் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சியின் இந்த இரட்டைப் பயன்பாட்டுத் தன்மை, வெப்பமயமாதலை 1.5°C ஆகக் கட்டுப்படுத்தும் பாரிசு உடன்படிக்கையின் இலக்கை அடைவதற்கான உலகளாவிய முன்னெடுப்பினைச் சிக்கலுக்கு உள்ளாக்குகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்