இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் - 75 ஆண்டு கால தூதரக உறவு
November 18 , 2024 300 days 257 0
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகள் தங்களது அரசுமுறை உறவுகளின் 75வது ஆண்டு விழாவினைக் கொண்டாடின என்பதோடு அந்த சிறப்பு நிகழ்வினை நினைவு கூரும் வகையில் ஒரு சிறப்பு சின்னத்தினையும் அவை வெளியிட்டன.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒரு நீடித்த நட்பு, கலாச்சாரப் பிணைப்புகள் மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களை இந்த இணைச் சின்னம் (இரு நாடுகளின் இணைவினை குறிக்கும் வகையிலான) அடையாளப்படுத்துகிறது.
இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய இரு நாடுகளும் 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதியன்று இரு நாடுகளும் அவை சுதந்திரம் பெற்ற சிறிது காலத்திலேயே அதிகாரப் பூர்வமான அரசுமுறை உறவுகளை ஏற்படுத்திக் கொண்டன.