இரு நாடுகளுக்கிடையே சுற்றுச்சூழல் ரீதியிலான ஒத்துழைப்பினை மேம்படுத்தச் செய்வதற்காக வேண்டி ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் பூடானும் கையெழுத்திட்டுள்ளன.
இந்த ஒப்பந்தமானது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்களால் காணொலி மூலம் கையெழுத்திடப் பட்டது.
இது பருவநிலை மாற்றம், கழிவு மேலாண்மை போன்ற பகுதிகளில் இருதரப்பு ஒப்பந்தத்தின் புதிய தளங்களை உருவாக்கும்.