TNPSC Thervupettagam

இந்தியா மற்றும் போட்ஸ்வானா – சிவிங்கிப் புலிகள் இடமாற்ற ஒப்பந்தம்

November 16 , 2025 5 days 48 0
  • குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் அரசு முறை வருகையின் போது, சிவிங்கிப் புலிகள் வளங்காப்புத் திட்டத்தின் கீழ் போட்ஸ்வானாவிலிருந்து 8 சிவிங்கிப் புலிகளை இடமாற்றம் செய்ய இந்தியாவும் போட்ஸ்வானாவும் அதிகாரப் பூர்வமாக ஒப்புக் கொண்டன.
  • எட்டு சிவிங்கிப் புலிகளில் ஐந்து, அடையாள ஒப்படைப்பின் ஒரு பகுதியாக மொகோலோடி இயற்கை வளங்காப்பகத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட காப்பு மையத்தில் விடுவிக்கப்பட்டன.
  • இந்தியா முன்னர் 2022 ஆம் ஆண்டில் நமீபியாவிலிருந்து எட்டு சிவிங்கிப் புலிகளையும், 2023 ஆம் ஆண்டில் தென்னாப்பிரிக்காவிலிருந்து பன்னிரண்டு சிவிங்கிப் புலிகளையும் இறக்குமதி செய்தது.
  • தற்போது 16 சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் பிறந்துள்ளதுடன், 27 சிவிங்கிப் புலிகள் இந்தியாவில் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்