இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு முக்கிய அமெரிக்க-ஐக்கியப் பேரரசு இராணுவத் தளமான டியாகோ கார்சியா அருகே ஒரு செயற்கைக்கோள் கண்காணிப்பு நிலையத்தை நிறுவ இந்தியாவும் மொரீஷியஸும் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
மொரீஷியஸ் பிரதமர் நவின் சந்திர ராம்கூலம் அவர்களின் இந்திய வருகையின் போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இது இந்தியாவின் செயற்கைக் கோள் தரவு கண்காணிப்புத் திறன்களை மேம்படுத்தும்.
டியாகோ கார்சியா தளம் உட்பட சாகோஸ் தீவுகள் மீது மொரீஷியஸின் இறையாண்மையையும் இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
கடல்சார் பாதுகாப்பு, உள்கட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் வகையில் மொரீஷியஸுக்கு 680 மில்லியன் டாலர் மதிப்பிலான மேம்பாட்டுத் தொகுப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மொரீஷியஸின் கடலோரக் காவல்படைக்கான கூட்டு நீரியல்சார் ஆய்வுகள் மற்றும் திறன் மேம்பாடு உள்ளிட்ட மேம்பட்ட கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்புடன் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தியுள்ளன.